Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மழை சுட்ட.. ரத்தக் கடத்தி..படுகொலை

- கோபால் நாதன்

மழை சுட்ட சூரியன்.. ரத்தக் கடத்தி..படுகொலை செய்யப்பட்ட நகரம்


01.
மழை சுட்ட சூரியன்
---------------------------

ஊரெல்லாம் கன மழை
பெய்து கொண்டிருக்கிறது.
அணையில்லை,
ஆனால் குளம் பிறக்கிறது.
குளத்தின் நடுவில் மிதக்கின்றன எனது வீடு.

இங்கிருந்துதான் நதி உற்பத்தியாகி
தெருக்களில் பெருநதியாக நகருகிறது...
குடை பிடித்து கால்களை நனைத்த நிழல்கள்

வீட்டை நீர் எங்கோ இழுத்துச் செல்கிறது.
பூச்சாடிலிருந்து உதிர்ந்த பூவின் படகில்
பயணிக்கிறது எறும்புகள்.
விறாந்தையில் குளிர் காய்ந்தது பறவைகள்
சோம்பல் முறிப்பில் உடைந்தன சிறகு.
நாட்காலியில் உறங்கும் பூனை
கனவு கண்டு புன்னகையில் சிலிக்கின்றது.

கிணற்றைக் காணவில்லை
நிர்வாணத்தை நீரால் ஆடையணிந்து
சந்தோசத்தால் மூழ்கியது.

கோதுமை மாவில் மிளகாயும்,
வெங்காயமும் கலவையாகிய ரொட்டி
பழைய காதலை சுவைக்கிறது.

இளகிய அதிகாலை சூரியன்
பனையோலை வேலி செத்தைக்குள்
மறைந்து ஒழித்துக் கொண்டிருக்கிறது.



02.
ரத்தக் கடத்தி

பின்
மாலை முடிந்து போன
இன்னொரு பகல் பொழுது
அதுவும் இரவு காட்டில் ஒளிந்து மறைந்து
வானம் இன்னொன்றாய் .... மீளவும்
மேகங்களை கூட்டி கொண்டு வந்தது
நிணத்தின் காவுகளை மணல் வெளியில்
தூக்கி வீசப்பட்டிருந்தது நிலவு

பிணமழுகி வெடித்து சிதறிய
காற்றின் வெளிப்பரப்பு மேல்
பறவைகளும் கணம் தவறி மூச்சு
திணறல்களால் மௌனிப்போடு
சிறகசைப்பில்லாமல் ஒளிந்து நிறைகிறது ..
சாம்பல் மேட்டில் மீதொரு துயர் கரைந்து.

ஒவ்வொரு விடியற் காலையும்
வீதியோரங்களின் புல்வெளி
ரத்தம் பூசிய காகித அட்டைப் பூக்களைத்தான்
தலை வெட்டப்பட்ட உடல்களால்
மின் கம்பங்களிலும் , தந்தி தூண்களிலும் ,
தொங்கி கொண்டிருக்கும்
பிண்டங்களின் காலிடுக்குள்
தலைகளாய் பூத்துக்கொள்கிறது.

எல்லைக்கான புணர்தல் சண்டையில்
ஆண் சிங்கங்கள் மூர்க்கத்தனமாய்....
சண்டை உச்ச நிலையடைந்து
புழுதி அள்ளி பூசும்
காடுகள் மெல்ல மௌனமாகி...
செத்துக் கொண்டிருக்கிறது.
வெற்றி ஆக்ரோசத்தில்
நிலத்துக்கு உரிமமுடைய
குட்டிச் சிங்கங்களை கொலைக்கரம் நீள்ந்து
நிர்வாணமாக அலையும் பெண் சிங்கம்
சுதந்திரக் பெருங்காற்றை சுவாசித்து
மல்லாந்து படுத்து உறங்கிறது.

நடுப்பகலில்
மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில்
கொடூரமான சொப்பனத்தில் கரைகிறேன்.
ஆயுதம் தோலில் சுமந்து கொண்டு
கரங்களில் ரத்தம் சொட்டிக் கொள்ளும்
தலைகளுடன் வீரர்கள்...
முகங்களில் உக்கிரக் கோபத்துடன்
என்னை ஒரு அடந்த காட்டின்
மரத்தில் தொங்க விட்டிருந்தார்கள்
ஒருவனின் சட்டையிலிருந்து விழுந்தது
கருணாகரனின்
"போரில் செட்டை கழற்றிய கருநாகம் "
கவிதை புத்தகம்.


03.
படுகொலை செய்யப்பட்ட நகரம்
------------------------------------

கற் குவியலாய் நிறைந்து
வழிகிறது அந்த
ஆச்சரியமுட்டும் திகில் நகரம்
மிஞ்சிய பாதிச் சுவர்களில் போரின்
உக்கிர அதிர்வுகள் தொப்பிள்
குழிகளின் தோண்டல் துவக்கின்
அடையாள பொத்தலுடன் சிதைக்கிறது,

மணல் அரித்து வீசி முடி கவிழ்த்து
புதைத்திருந்த படகின் நிணமும்,
பனை, தென்னை மரங்களின் தலை
முறிந்திருந்த தோப்பின் துயரும்,
பல்லாயிரம் உடலின் ரகசியங்களை
மண்ணின் சூன்ய குரூரத்துள்...
மறைக்கப்பட்டிருக்கிறது.
பாழ் நிலத்துள் உறைந்து வாழ்கின்ற
பிடாரனிடம் இன்னும் கை நிறைய
வன்மம் வழிந்து பீறிட்டுக் தொடர்கிறது.

நாய்களில்லாத தெருக்களில்
பிசாசு கொடூரத்தாண்டவம் மீட்சியாய்
குடியிருப்புக்களை நாசப்படுத்தி சினப்படுத்துகிறது.
ஆக்கிரமிப்பில் சாத்தானின் கரங்கள்
ஓங்கி உயிரின் வதைபடலம்
தொகை தொகையாக நீண்டு...
வெளியெல்லாம் ரத்தவாடை வெடுக்கெடுக்கிறது.

கடவுளிடம் உரத்த குரலில்
கை கூப்பி தொழுது மன்றாடி
கண்ணீர் மல்கியவர்களின் கரங்களும்
சிதைந்து அறுந்து விழுந்திற்று....
சாவின் துயர் கோவில் மண்டபத்தினுள்
எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டன.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-05-24


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube