பயணியே!
------------------
நாடகள் கிழமைகளாகி
கிழமைகள் மாதங்களாகி
மாதங்கள் ஆணடுகளாகி
காலங்கள் கரைந்து
நகர்ந்து செல்கின்றன
காலவோட்டத்தோடு
நீயென்ன நானென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
மனைவியென்ன
பிள்ளையென்ன
எல்லாமும் சேர்ந்தே
காற்றோடு காற்றாகி
கலைந்தே செல்கின்றன!
மாடிகள் மனைகள்
சொத்துக்கள் பத்துக்கள்
கோடிகள் குபேரர்கள்
அத்தனையும் கலந்தே
காற்றோடு காற்றாகி
கலந்தே செல்கின்றன.
பிரிந்தவை பிரிந்து போக
பயணங்கள் தொடர்கின்றன!
கலந்ததவை கலைந்து போக
வாழ்வின் எல்லைகள் நோக்கியே
பயணங்கள் தொடர்கின்றன.
எல்லைகள் வரும் போது
கலந்தவை எதுவுமே
சேர்ந்து வரா
கூடியவை ஏதுமே
கூட வரா
தேடியவை ஏதுமே
தேடிவரா
தேய்ந்து மறையும்
போலி வாழ்வில்
போகம் என
எதுவும் இல்லை.
எதுவும் இல்லா
இந்த வாழ்வில்
நின்று
மீண்டு வந்து,
நீள மகிழ்ந்து
பயணிக்க
எல்லை வரை
மகிழ்ந்தே செல்லத்
உள்ளத்தினுள்ளே
திடம் கொள்
மகிழ்ச்சியே
இலக்காய்
பயணி.
- வேந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-05-24