Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காதல் கீதம்..நீலக் கடலின்.. தேவனின் தேவை

- சின்னு (சிவப்பிரகாசம்)

காதல் கீதம்.. நீலக் கடலின் நீர்க்குமிழிகள்.. தேவனின் தேவைகள்


01.
காதல் கீதம்
-------------------

கடலலை சொல்லும் கவிதை பிடிக்குதே
கரை பேசும் மறுமொழி புரியுதே
மரநிழல் போதும் நானும் வாழ்ந்திட
மனம் ஏனோ ஒப்ப மறுக்குதே

இமை மூடும் வாழ்வின் இறுதில்
நீ தெரிந்தால் வாழ்வில் பெரும் சுகம்
இறையாகும் அன்பின் திருமுகம்
இனிதாகும் வாழ்வில் எதுவுமே

கவியான காதல் பித்தன் நான் - எனைச்
சிலையாக்கும் காதல் கவிதை நீ

இருளானால் வெட்கம் விலகுதே
இனிதான உன் இதழ்கள் திகட்டுதே
புதிதான மோகம் பிறக்குதே
புதிரான கவிதை தொடங்குதே

இமைமூடும் அழகைக் காணவே
இருள்விலக்கும் அகல்விளக்கைத் தேடினேன்
இனிதான புன்னகை காணவே
முழு நிலவில் உன் அழகை நாடினேன்

வழிந்தோடும் வியர்வைத் துளிகள்
வளராதோ இரவின் நீளம்
இனிதான காதல் கீதம்
கற்றுவரும் கலவியின் பாடம்



02.
நீலக் கடலின் நீர்க்குமிழிகள்..
----------------------------------

நீலக் கடலை
நீந்திக் கடக்க
பாலைக் கப்பலின்
துணையைத் தேடி

கானகக் குயிலின்
கானம் கேட்க
காகத்தைப் பிடித்து
கத்தச் சொல்லி

அணிகள் சூடிய
அழகை நாடி
அழகிய உருவை
நிறை குறைத்திடும்

கன்னியரே காளையரே
கரை காண்பீரா

இல்லை
நீலக் கடலின் நீர்க்குமிழிகள்
ஆவீரா


03.

தேவனின் தேவைகள்
----------------------------
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-28


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube