Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

துப்பாக்கிகுழல்களுக்குள்...

- ஈழநிதி

துப்பாக்கிகுழல்களுக்குள்...
-----------------------------------

துப்பாக்கிகுழல்களுக்குள்
குடியிருக்கின்றோம் நாங்கள்
இன்றுவரைக்கும்
அழுவதற்கும் சுவாசிப்பதற்கும் மட்டுமே
அனுமதிதேவைப்படவில்லை.
நாளையோ,மறுநாளோ
காற்றையும் பரிசீலித்தே
சுவாசிக்கவேண்டியிருக்கும்

இதைப்போல அது அதைப்போல இது
ஒன்றினுடாக இன்னொன்று
இன்னொன்றினூடாக வேறொன்று
அதுக்காக இது இதுக்காக அது
எதுக்காக நாமென்று ஏதுமறியா நாளின்று

காற்றினூடாக க் கடத்தல்
தீயினூடாகத்திருட்டு
அரசியலில் சமயம்
சமயத்தினூடாகச் சாதீயம்
சாதீயத்தினூடாக அரசியல்
அரசியலால் அழித்தல்

பக்தி பயமுறுத்தும் பயம் உயிர்கொல்லும்
உயிரழிவில் பேய்மகிழும்
பேய்களேகடவுளாகிவர பிரயத்தனப்படும்,
துப்பாக்கிகுழல்களுக்குள்
நாங்கள் குடியிருக்கும்வரை...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-03-09


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கருக்குகள்.. இரசிகர்கள்
  • அவர்களும் இவர்களும்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube