Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விட்டில் பூச்சிகள் ..தவம்.. பொக்கிஷம்

- ப.மதியழகன்

விட்டில் பூச்சிகள் ..தவம்.. பொக்கிஷம்

01.
விட்டில் பூச்சிகள்
------------------------

நட்சத்திரங்களின்
நகலா இருக்க
ஏன் ஆசைப்படுகிறார்கள்
உடல் மொழியைக் கூட
காப்பியடிப்பது
உங்கள் சுயத்தை
அழிக்காதா
உன் குரலை
மிமிக்ரி பண்ணும் அளவுக்கு
நீ வளர வேண்டாமா
எத்தனை பேர்
கூக்குரலிடுகிறார்கள்
இயேசு இறங்கி வந்தாரா
திரையரங்கிலேயே விட்டுவிட்டு
வர வேண்டியதையெல்லாம்
ஏன் சுமந்து கொண்டு திரிகிறாய்
நிழலை நிஜமென்று
நம்பியவர்களின் கதியெல்லாம்
என்னவானது தெரியுமா
கனவுக்குள் புகமுடியாது
என்பதால் தானே
அதற்கு கனவுலகம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
கோடி என்றவுடன்
ஏன் வாயைப் பிளந்து விடுகிறாய்
தெய்வமே உன் வீட்டில் வந்து
குடியிருக்கும் போது
சில்லறை விஷயங்களுக்காக
ஏன் வீணாய் அலைகிறாய்
நீ சாதிக்கும் போது
பார்த்துப் பெருமைபட
குடும்பம் இருக்க
வேண்டாமா
பிறரது வாழ்க்கை மூலம்
பாடம் கற்காவிட்டால்
வாழ்க்கை நடுத்தெருவில்
நிறுத்திவிடாதா.


02.
தவம்
---------------

கணினியின்
கடவுச்சொல்லை மறந்தால்
உறைந்து போக வேண்டாம்
உள்ளே நுழைய
ஆயிரம் வழிகள் உள்ளன
பிச்சைக்காரனுக்காக
சில்லறையைத் தேடி
ஏமாற்றமடைய வேண்டாம்
உனக்கும் சேர்த்து
இரண்டு ரூபாயாக தட்டில்
எவரேனும் போட்டுவிடுவர்
மற்றவர்கள் செய்கையில்
குறை காண வேண்டாம்
படைப்பே குறையுடையது
எனும் போது
பந்தயத்தில் ஓடுவது போல
நடந்து கொள்ள வேண்டாம்
சின்ன சின்ன சந்தோஷங்களை
தவறவிட்டுவிட நேரலாம்
வரம் கொடுப்பவர் தலையில்
கை வைப்பவர்களின் வலையில்
வலியச் சென்று விழவேண்டாம்
சிடுசிடுவென முகத்தை
வைத்துக் கொள்ள வேண்டாம்
குழந்தை உள்ளம்
உடையவருக்கே
சுவர்க்கத்தின் ராஜ்ஜியத்தில்
இடமுண்டு என
பைபிள் சொல்கிறது.



03.
பொக்கிஷம்
--------------------

சூரியனை நோக்கியே
தலைசாய்க்கும் சூரியகாந்தி
பழத்தை சுவைப்பவர்கள்
எண்ணிப்பார்ப்பதில்லை
மரத்தை வைத்தவர்
எவரென்று
இலை உதிர்த்த மரத்தை
எவர் பார்க்க விரும்புவர்
அவரவர் உலகத்தில்
அவரவர் பத்திரமாய்
பசியுடன் தூங்கும்
பிச்சைக்காரனின் இரத்தத்தை
குடிக்கும் கொசுக்கள்
விதை எப்படி
மண்ணைப் பிளக்கிறது
எவரின் ஆணைப்படி
கிழக்கு வெளுக்கிறது
கோயில் உண்டியலில்
போடும் காசை
தர்மம் பண்ணினால்
என்ன
நாட்கணக்கில் வரிசையில் நின்று
தரிசனம் செய்தால்
வரம் கொடுத்துவிடுமா சாமி
பாதாள அறைகளில்
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும்
தட்டில் சில்லறை போட்டால் தான்
சாமி கண்ணைத் திறக்கும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுள் தந்த பரிசு.. தியாகத்தின்
  • மறுபக்கம்
  • நல்லதோர் வீணை.. புயலுக்கு பிந்தைய
  • தேவனின் திருக்கரம் .. நடைவண்டி
  • பாட்டுக்கு ஒரு தலைவன்
  • என் தேவதை இருக்குமிடம்
  • வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
  • உறக்கமற்றவனின் விடியல்
  • சபிக்கப்பட்டவனின்.. விடியல்
  • இறுதி இரவும்.. விளையாட்டுச் சங்கிலி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube