காத்திருத்தலின் வலி
----------------------------
பழுதடைந்துபோன
என் வீட்டின் கதவுகளை
என்றாவது
நீ தட்டக்கூடும்
என எதிர்பார்ப்புகளோடும்
மௌனமாகிப்போன
என் புல்லாங்குழலின்
துளைகளில்
உன் இசை குறிப்புகள்
வந்தமரக்கூடும்
என பரிதவிப்போடும்……
உன்னை தேடி வந்த
அந்திமழையின் விசாரிப்புகளுக்கு
பதில் கூறும் துணிச்சல் அற்று ,
காத்துக்கொண்டே இருக்கிறேன் ..
உனக்காக
நான் வங்கி வைத்த கைகடிகாரம்
நின்ற பின்னும்
உன் மீள்வருகைக்காக
காத்துக்கொண்டே இருக்கிறேன் ....
உறைந்துபோன
என நிகழ்காலம்
மீண்டும் உயிர்பெறும்
என்கிற பேராசையில் மிதந்தபடி
காத்துக்கொண்டே இருக்கிறேன் ...
நீ வரும் வரைக்கும்
காத்திருத்தலின் வலியை
உடைந்த
என் புல்லாங்குழல் வழி
இசைக்கத்தான் எத்தனிக்கிறேன்,
அவை மௌனங்களை மட்டுமே
சொட்டுகிறது
இசைக்கபடாத என் இசைக்குறிப்புகள்
மரித்துவிடுமோ
என அச்சப்படுகிறேன் நான் .
சீக்கிரம் வந்துவிடு .
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02