மழை
----------
திடும் என கண்
விழிக்கிறாய்
ஒன்று இரண்டு நீர்
துளிகள் ஒற்றுமை
காட்டி பேர் இடியுடன்
உயிர் பெருகிறாய்
தாங்கி சென்ற மேகம்
கரைகிறதே பூமியில்
நீண்ட வானம் உன்னை
தாங்கி சற்று முன் தான்
அமைதியாய்,
உன்னை
தீண்டிய வாலிபன் யார்
இப்படி கொட்டி தீர்க்கிறாய்
நீ அழுவதாய் எண்ணி
கொண்டாலும் அழகாய்
தான் இருக்கிறது,
இருள் நீங்கி ஒளி
பெரும் மேகம்
மழை நீங்கி மகிழ்கிறதே,
வானம் இடம் கொடுப்பதால்
அதுவே உன் தந்தை,
தென்றல் உன்னை தீண்டிய
பின் நீ பொழிவதால் அதுவே
உன் தாய்,
நீ துள்ளி குதித்து ஓடி மறைவதால்
மலை உன் தமையன்,
உன்னை அரவணைத்து தாங்கி
கொள்வதால் ஆறு உன் தங்கை,
நீ ஓடிய பின் கடலில் சங்கமிப்பதால்
காதலின் ஊடல் பொருந்திய இவ்விடம்
உனக்கு புகுந்த வீடு,
நீ அனைத்து உயிர்களையும்
உயிர்ப்பதால் பொதுவாய் நீ
கடவுள் ....
வானத்தில் பிறந்து கடலில் புகுந்து
கரைதேடி கரையும் உன் வாழ்க்கையும்
பாடமாய் உணர்கிறேன
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-09-05