Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தேவதை வருகிறாள்

- தி.ராஜகோபாலன்

தேவதை வருகிறாள்
---------------------------

தவம் கிடந்தார்கள் தரிசனத்திற்காக
வலம் வந்தார்கள் ப்ரதக்ஷினமாக
பூக்கொடுத்தர்கள் அர்ச்சனையாக
எவனையும் பொருட்படுத்தவில்லை
நிச்சயம் அவள் தேவதைதான்.
நான் ஒன்றும் நாத்திகன் அல்ல அவளை மறுப்பதற்கு.
வற்றாத அன்பும் ஈர்ப்பும் எந்நாளும் நெஞ்சில் உண்டு.
தூசியாக அவள் என்னை துச்சமாக மதித்தாலும்,
மாசில்லா காதல் என்தன் மனதிற்குள் ஊற்றெடுக்கும்
என்றாலும் அவளுக்கு ஏற்றவன் நானில்லை.
விலையற்ற வைரத்தை, தங்கத்தில் பதிப்பார்களேயன்றி
தகரத்தில் பதிப்பதில்லை.
கொம்புத்தேனை முடவன் விரும்பக்கூடாதா?
அவனுக்கு கால்கள்தான் இல்லை, நாக்கு இருக்கிறதே.
எண்ணத்தை ஈடேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்.
எண்ணுவதையே தடைசெய்யும் பொல்லாத உலகமன்றோ!
சத்தியம் சொல்கின்றேன்.
நெஞ்சத்திலிருந்து அவள் எண்ணத்தை இப்போதே நீக்கிவிட்டேன் .
என்றைக்கும் அவளை இனி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
என்றாவது என் முன்னே அவள் எதிர்ப்பட்டுவிட்டு விட்டால்,
பாடுபட்ட நிஷ்டை எல்லாம் பாழாகிப்போய்விடுமே.
அவள் கொலுசொலி கேட்கும்போதே கண்களை இறுக மூடிவிட்டால்,
விளையவிருக்கும் முட்செடியை முளையும்போதே தடுத்திடலாம்.
யோசனை என்று வந்துவிட்டால் சாணக்கியனுக்கும் சளைத்தவன் நானில்லை.
அந்த கொலுசொலி எப்போது கேட்குமென்று எதிர்பார்த்தபடி நெஞ்சம் ...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-30


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அரங்கேற்றம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube