எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாய்..
தர்மம் தலைகுனிந்ததாய்
சரித்திரம் இன்று வரையும்
எழுதவில்லை.
ஆனால்
காலத்தோடு கை கோர்த்து
கணக்கு எழுத வேண்டிய
தேவை எமக்கு
இத்தனை நாள் போயிற்று
இனியும் காலத்தைக் கடத்தாதே !
இப்போது சொல்
இன்னமும் உனக்கு இலட்சங்கள்
வாங்க ஆசையா?
வேண்டாம்
தர்மம் என்றும் தாழ்ந்ததும் இல்லை
அதர்மம் தலை எடுத்ததும் இல்லை
அதனால்
அநியாயமாய் அழிந்து போகாதே !
உன் துரோகத்திற்குக் கட்டளை இட்டவன்
உல்லாசமாய் வாழுகின்றான்
நீ மட்டும் ஏமாளியாகி..
நிலத்தில் புதையப் போவதாய்
ஆடம்பிடிக்ககின்றாய்.
ஒரு கணம் நில் !
உன் துரோகத்தனத்திற்குக் கட்டளையிட்டவ¬(ள)ன
களத்திற்கு வரச் சொல்லிக் கட்டாயப் படுத்து
தன் இடம் விட்டு அவன்
தன்னுயிர் போக்க
நிச்சயம் வரமாட்டான்.
புத்தியற்றவனே
இப்போதாவது புரிந்து கொள் !
புதுவழி உருவாக்கு
போ! போய் அவளை(ன)யும்
அவர்கள் பின்னால் நிற்பவர்களையும்
களத்தில் சந்திக்கச் சொல்லு
கதை முடிகிறதா அல்லது
தொடர்கிறதா என்று
தெற்கே நின்று கொண்டு
கவனித்துப்பார்.
சா¤த்திரம்
சந்தோசமான முடிவை
விரைவில் உனக்கும் அறிவிக்கும்.
நீ இனி எம்மோடு இல்லை
என்றபின் இன்னுமொரு ஏற்பாட்டிற்கு
இடமேயில்லை
களைகள் இன்னும் உள்ளதால்
காக்கை வன்னியர் கதை தொடர்கிறது
களையெடுப்புக்களிற்காய்
காலம் காத்துக்கிடக்கிறது
தர்மம் தலைவன் பெயா¤ல்
எம்மோடு வாழ்ந்து கொண்டேயிருக்கும்
தமிழீழம் மலரும்
- சுந்தரன் -
கனடா
- சுந்தரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01