உரிமையின்மை தொடக்கம்
--------------------------------------
இருள்சூழ் வீடு
சுருண்டு கிடந்தன
அகமும் புறமும்!
அன்னையா?
வளர்க்கத் தெரியுமா?
வளர்த்தால் போதுமா?
வினாக்கள் வலுத்து
மருமகள் சீற்றம்!!
வசையினது விசை
சற்று ஆழமாக...
கருகும் மலர்கள்
துடிப்பு தொடர்ந்தது!!
அன்று
பிடியாது கூட்டுடுனே
பயணிக்க எத்தனித்தேன்
இன்றோ
அத்தொடற்பயணம்
தடங்களுடன் தயக்கம்!!!
சுரக்க மறுத்ததில்லை
அதரங்கள் துடிக்கின்றன
மெய்யுரைக்க,
சுரக்கவே இல்லை!!!
என்றுமன்றி இன்று
கால் சலங்கை
கனலாக உறுத்தியது!!!
- தேனு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27