காகிதப்புலி
------------------
எதற்கடா இன்னும்
விட்டு வைத்திருக்கிறாய்
என்
பற்களை
நகங்களை
ஒரு மேடு
ஒரு பள்ளம்
அதே செயற்கையுடன்
ஒரு சுனை
நீ
எப்போதாவது
இட்டு வரும்
தொத்தல் ஆடு
ஓடத் தோதில்லை
நான்
துறத்தலைத்
துறந்தாயிற்று
அன்றாடம்
நீ
அறுத்து வந்து
போடும்
மாமிசம்
கம்பிகளுக்கு
வெளியே
காணும்
வேடிக்கைக்
கும்பலுக்கே
உமட்டுகிறது
இன்னுமென்ன
பாசாங்கு
பிறிதொரு
கூண்டிலுள்ள
மான்களின்
வாசனையே
போதும்
வெறும்
மோர் சாதம்
வை
ஊறுகாய் கூட
வேண்டாம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-01-01