ஜோதிராமலிங்கம்.
--------------------------
முக்கியம்
o
வேண்டாத பகுதிகளின்
மிச்சம் சிலை.
வேண்டாத வார்த்தைகளின்
மிச்சம் கவிதை.
வேண்டாதவற்றின்
மிச்சம் வாழ்க்கை.
எனவே
வேண்டியவை முக்கியம்
வேண்டாதவை அதிமுக்கியம்
000
----------------------------
முனியாட்டம்
o
பள்ளிக்கு வந்ததும்
காலை பய பரப்பு.
குகை முனியப்பன் கோயில்
பட்டாக்கத்தி டுதாம் வேகமாய்.
மதிய உணவு இடைவேளையில்
வெய்யிலில் ஓடி
நெஞ்சு படபடக்க
கும்பலாய் நின்று
பயத்துடன் பார்க்க
காற்றில் அசைந்தது
பட்டாக்கத்தி-
கூடவே
மீசை உயர விழிகள் பிதுங்க
முறைத்தார் முனி.
கத்தியில் உயரே குத்திய
எலுமிச்சை பொதக்கென விழ
பிடித்த ஓட்டம்
பள்ளிக்கூட வாசலில்.
000
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01