Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

யாவர்க்கும் பொதுவாம் நீதி

- ப.மதியழகன்

யாவர்க்கும் பொதுவாம் நீதி
----------------------------------------

உச்சி முதல்
உள்ளங்கால் வரை
எங்கே குடியிருக்கிறது
இந்த உயிர்
கூட்டிலுள்ள பறவையினைப் போல்
சிட்டெனப் பறந்து விடுகிறதே
இந்த உயிர்
சாமானியனுக்கும்
சக்கரவர்த்திக்கும்
சமமாய் ஆகிப்போனது
இந்த உயிர்
கூட்டை விட்டு
இந்த உயிர்
ஓடவில்லையென்றால்
துயரச் சுமை தாங்காமல்
மரணத்தை யாசகமாய்
கையேந்தி கேட்கும்
இந்த உடல்

உயிர் பயத்தினாலே தான்
சிறிதனவேனும் அறம்
நிலைத்திருக்கிறது
இந்த பூவுலகில்
மயானத்தில் தாண்டவமாடும்
ஆடல்வல்லானை பார்த்ததும்
புரிந்து போகும்
யாவர்க்கும் பொதுவாம் நீதியென்று
வியாதியாலே சாக்காடு
செல்லும் பாதையெங்கும் பூக்காடு
இடுகாட்டில் தீக்காடு
இது தான் சைவ நீதி என்று
விளங்காமல் விளங்கிப்போகும்.

காண்பனவெல்லாம் மாயை
விழுகின்ற மழைத்துளிகளனைத்தும்
முத்துக்களாவதில்லை
பெற்ற பிள்ளைகளனைத்தும்
மச்சு வீடு கட்டுவதில்லை
ஒன்றிரண்டு குறைகளில்லாதவர்
வாழ்க்கையில் எவருமில்லை
எல்லோரும் சந்நியாசம் கோலம் பூண்டு
திருவண்ணாமலையில் பண்டாரமாய்
அலைவதில்லை
திருவோடு கூட சுமையென்று
எண்ணுபவர் ஊரில் ஆங்காங்கே
திரியத்தான் செய்கிறார்கள்
கொண்டைச் சேவலுக்கு கர்வம்
கோழி கூவி பொழுதுகள் விடிவதில்லை என
ஆண்மகவு என்றாலும்,
பெண்மகவு என்றாலும்
பெற்றோருக்கு எல்லாமே
ஒரே உதிரம் தான்
மறுபடியும் மறுபடியும்
அலையாய் எழுந்து
கரையோடு முயங்குவது
கடலுக்கு சலிப்பதில்லை
அணை கட்டி தடுத்தாலும்
நதியின் பயணம் கடல் நோக்கியே
ஸ்படிகம் போன்றதாயினும்
விழும் இடத்தைப் பொறுத்தே
மழைக்கு முகவரி
நேற்றிருந்தவன் இன்றில்லை
என அறிந்தும்
மார்தட்டி நிற்பவனை
மண்மகள் பார்த்துச் சிரிக்கின்றாள்
நகைப்புக்கு என்ன பொருள்
மற்றவர்கள் காலில் மிதிபடும்
மண்ணாக
ஒரு நாள் என்னோடு கலப்பாய் என்றா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுள் தந்த பரிசு.. தியாகத்தின்
  • மறுபக்கம்
  • நல்லதோர் வீணை.. புயலுக்கு பிந்தைய
  • தேவனின் திருக்கரம் .. நடைவண்டி
  • பாட்டுக்கு ஒரு தலைவன்
  • என் தேவதை இருக்குமிடம்
  • வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
  • உறக்கமற்றவனின் விடியல்
  • சபிக்கப்பட்டவனின்.. விடியல்
  • இறுதி இரவும்.. விளையாட்டுச் சங்கிலி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube