Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அகதியுடனான நேர்காணல்

- வே.தினகரன், பத்தனை

அகதியுடனான நேர்காணல்
--------------------------------

எங்கிருந்து வருகிறாய்…?
மனிதாபிமானத்தின் தேசத்திலிருந்து
ஏன் வருகிறாய்?
அங்கு யுத்தம் நடக்கிறது
யுத்தம் ஏன் நடக்கிறது…
மனிதர்களை மீட்பதற்கு
உனது கால்கள் எங்கே?
யுத்தத்தின் காலைப்பசிக்கு கொடுத்தேன்
உனது கைகள் எங்கே?
யுத்தத்தின் பகல்பசிக்கு கொடுத்தேன்
உனது தலை எங்கே?
யுத்தத்தின் இரவுப்பசிக்கு கொடுத்தேன்
உனது குருதி எங்கே?
யுத்தத்தின் தாகத்திற்கு கொடுத்தேன்
உனது சொத்துக்கள்…?
ஆயுதங்களின் கொள்ளை ஆசைக்கு
உனது இளமை எங்கே..?
அது சமருக்கு சமர்ப்பணம்
உனது குழந்தைகள்?
நான்தான் அது…
அவர்களின் குழந்தைகள்
அதுவும் நான்தான்.
கனவுகள் இருக்கின்றதா? எங்கு?
எங்கோ இருக்கிறது. ஆனால் இருக்கிறது.
உனது மிகுதி உயிர் எங்கே…
என்னூரில் ஒரு மரத்தடியில்
அங்கு எப்படி…?
என்காதலி அங்குதான் எரிந்துபோனாள்.
காதல் வேறா…?
அகதிகளாவதற்கு முன் நாங்கள் மனிதர்கள்.
யுத்தம் உங்களை என்ன செய்தது…?
கேள்வியே பிழை. யுத்தம் என்ன செய்யவில்லை என்பதே சரி.
யுத்தம் மனிதர்களை மீட்டதா?
கேள்வியில் குழப்பம்…
என்ன சொல்ல விரும்புகிறாய்.
எது நடந்ததோ… எது நடக்கிறதோ…
எது நடக்குமோ…
ஒன்றும் நன்றாக நடக்கவில்லை:
நடக்கிறதில்லை; நடப்பதில்லை.
அப்படியே இரு… ஒரு புகைப்படம் வேண்டும்.
வேண்டாம்…
கமராக்கள் உண்மை சொன்னதில்லை
நாங்கள் உண்மையின் குழந்தைகள்
நாங்கள் யுத்தத்தின் குழந்தைகள்





பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வரலாற்றை வாழ்தல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube