என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
01.
என் உயிர் நீதானே
------------------------
எனக்கெனப் பிறந்தவனே என்னுள்ளே கலந்தவனே
எல்லையில்லா இன்பங்கள் எனக்களித்து நின்றவனே
எனைப் பிரிந்து ஏன் சென்றாய்- உன்னுடனே
என் உயிரையும் பிரித்து ஏன் சென்றாய்
காதல் விதை விதைத்தாய் பாச நீரூற்றினாய்
கதைகள் பல பேசிப்பேசி களிப்பூட்டினாய்
இரவெல்லாம் விழித்திருந்து காதல் விருந்தளித்தாய்
விடிவெள்ளி காலிக்க விரைந்து விடை பெற்றாய்
விதை வளர்ந்து மரமாகி, மொட்டாகி, பூவாகி,
பிஞ்சாகி, காயாகி, கனிந்து வரும் வேளையிலே
விதியது வந்ததோ வேரினைக் களைந்திட
அறுவடைக்கு முன்னரே அழிந்தன அத்தனையும்!!
பாதைகள் தடம் மாறி, பயணங்கள் வேறாகி,
வாழ்க்கையும் தனித்தனி என்றாகி- இன்றோ
நீ எனது சொந்தமில்லை; நான் உனது உரிமையில்லை;
உயிர் மட்டும் உன்னுடைய உயிலாக இருக்கின்றது
நீ வளர்த்த காதல் மரம் என்னுள்ளே- சொந்தமாய்
சுகமாய், உரிமையாய் வியாபித்திருக்க
அந்நிழலில் தேடுகிறேன் அமைதியினை நான் இன்று
என்னுயிரை எந்நாளும் உன் காதல் வாழ வைக்கும்!!!!
02.
அன்பளிப்பு
----------------
பெற்றோர்க்கு பெருமையை அன்பளித்தாய்
உற்றார்க்கு உயர்ச்சியை அன்பளித்தாய்
ஊருக்குமகிழ்ச்சியை அன்பளித்தாய் - எனக்கோ
வாழ்க்கையையே அன்பளித்தாய்!
எத்தனை அன்பளிப்புகள் நீயெனக்குத் தந்தாய்-உன்
அன்பை விட இவையெல்லாம் பெரிதோ என்றேன்
அன்பின் அடையாளம் அன்பளிப்புகள் என்றாய்
உன் உரிமை என்றாய்; கடமை என்றாய்;
என் அன்பின் அடையாளமாய் எதை தந்தால்
உன் அன்பிற்கு ஈடாகும் என்றே நான் சிந்தித்தேன்
உயிரை விட உயர்ந்ததான என் காதலைத் தவிர
உயர்வாக வேறெதுவும இல்லை என்னிடம்
களங்கமில்லா என் காதலை ஏற்றுக்கொள் என்னுயிரே!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14