அறிமுகம்.. நாளொரு மேனியும்
01.
அறிமுகம்
--------------
நான் புதியவனா
இல்லை
முதியவன்
முற்றிலும் முதியவன்
நேற்று இருந்தவன்
இன்று இருப்பவன்
நாளையும்
இருக்கப்போகிறவன்
நான் ஒன்றும் புதிதில்லை
புதியது, பழையது என்பதெல்லாம்
எனக்கு ஒன்றும் புரிவதில்லை
02.
நாளொரு மேனியும்...
----------------------------
காங்கோவின் காலை நேரம்
மந்தமாய் மசமசவென்று
மழையுமில்லை வெயிலுமில்லை
எக்கேடுகெட்டும் ஒழிந்துபோ
என்றது பூமியைப்பார்த்து வானம்
கிறங்கிய மனிதர்கள்
கிடுகிடுக்கும் சாலைகள்
இன்னொரு நாள் ஆரம்பித்திருக்கிறது
கழியும் இதுவும்
கடந்தும் விடும்
- ஏகாந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-06-22