Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பருக, தீர்ந்துபோனது கனவல்ல...!

- கலாசுரன்

பருக, தீர்ந்துபோனது கனவல்ல...!
--------------------------------------

மனமுடைந்து சிதறிய
துகள்களின் நிழலில்
குளிர்காயும் ஞாபகங்கள்...!
கருவிழி அசையாது அர்த்தமின்றிப்
பார்த்திருக்கும் கண்முனை வெற்றிடத்தில்
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்...!
சொல்வார்த்தை கேட்காமல்
சற்று தனிமை விரும்பி முன்னிருந்த
தேநீர்க் குவளையில் குதித்தது கனவொன்று...!
கடைவிழி முறைப்போடு மெல்ல மெல்ல
பருக, தீர்ந்துபோனது கனவல்ல
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்...!
வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது
நழுவிட எட்டிப்பிடிக்கையில்
விழுந்து நொறுங்கியது தேநீர்க் குவளை....!
நொறுங்கிய துண்டுகளில்
என் கனவுகளின் உருவங்களும்
மிச்சம் சிந்திய தேநீரில் என்
நினைவுகளின் ஈரமும் கண்டேன்...!
கருவிழிகள் சலனமுற்று
சிந்திய விழிநீர் முத்துக்களின்
பிரிதலும் என்னை மீண்டும் கனவுகளில்
தள்ளிவிட்டு சிரித்தன...!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மன சதுப்பு.. குடைக் கம்பிகள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube