நம்பிக்கை கொள்!..கருவறை எப்படி கல்லறையானது?
01.
நம்பிக்கை கொள்!
------------------------
மனிதா
மனமும்
ஒரு விளைநிலந்தான்
அதில் உன்
என்னங்களை
விதைதுவிட்டு
வியர்வை
நீரைவிடு
நிச்சயம்
முளைவிடும்
உழைப்பை
உரமாக இட்டு
சோம்பல்
களையகற்று
நிச்சயம்
வேர்விடும்
சூரியன் மறைவது
காலையில்
மலர்வோம் என்ற
நம்பிக்கையில்தானே
நிலவு தேய்வது
நிச்சயம்
வளர்வோம் என்ற
நம்பிக்கையில்தானே
வவ்வால்
தலைகீழாக
தொங்கினாலும்
அதன் வாழ்க்கை
நேராகத்தானே
இருக்கிறது
உன் நிழல்
உன்னைவிட்டு
நீங்காதபோது
வெற்றியும்
உன்னைவிட்டு
விலகாது
பறவையின்
சிறகு அதனை
வானத்தில்
பறக்க வைக்கும்
என்றால்
நம்பிக்கை
சிறகு உன்னை
வாழ்க்கையில்
சிறக்க வைப்பது
நிச்சயம்.
02.
கருவறை எப்படி கல்லறையானது?
-----------------------------------------
ஊர் கூடவில்லை
உலகம் அறியவில்லை
தப்பு அடிக்கவில்லை
ஒப்பாரி ஒலிக்கவில்லை
பிறப்பின் நோக்கமும்
தெரியவில்லை
இறப்பும் எதற்க்காக
புரியவில்லை
கருவறை குழந்தையின்
கடைசி கேள்வி
கருவறை எப்படி
கல்லறையானது?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-13