Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விண்ணப்பம்.. காணவில்லை!!!

- கவிதன்

விண்ணப்பம்.. காணவில்லை!!!

01.
விண்ணப்பம்
-------------------

அன்றாடம்..
அரசியல்...
அறிக்கை....
அநியாயங்கள்...
அக்கிரமங்கள்...
அதிகார துஸ்பிரயோகம்....
அடிதடி....
அகால மரணம்....
ஆக்கிரமிப்பு...
இறுதி அஞ்சலி....
ஈடற்ற இழப்பு....
உடல் தகனம்...
ஊக்கத்தொகை....
ஊழல் பேர்வழிகளின்
எச்சத்தின் மிச்சம்....
ஏழைபாலைகள்.........
ஏமாற்றங்கள்....
ஒடுக்கப்பட்டவர்கள்........
ஓட்டுக்காக மட்டும்.....

சனநாயகம் இங்கே
கூறு போட்டு விற்க்கபடுகிறது.....
நெஞ்சு பொறுக்காமல்
சுத்திகரிக்க
முனைபவர்களிங்கே
சுழற்றியடிக்கப்படுகின்றனர்
முட்டாள்களின் முதல் வரிசையில்....

அவ்வளவையும்
கண்டும், காணாததுமாய்
கடந்து செல்லும்
வாழ்க்கைப்பயணத்தில்
வெறும் உயிருள்ள பிணங்களாய்
வளம் வருகின்ற வரையில்
அரசியல்வாதிகலென்ற பெயரில்
சுயநலவாதிகளின்
மடியில் மனிதம்
மடிந்துகொண்டுதானிருக்கும்....

படைத்த இறைவனிடம்
விண்ணப்பிக்கும்
வசதி வேண்டும்

சுயநலவாதிகளுக்கும்....
அரசியல்வாதிகளுக்கும்....
தண்ணியில்லா
வேற்றுகிரகத்துக்கு
மாற்றல் வேண்டி....


02.
காணவில்லை!!!
------------------------

அலமாரியில்தான வச்சிருந்தேன்...
எங்கம்மா போச்சு...
என் ஹால் டிக்கெட்டு......!!!
பரீட்சைக்கு நேரமாச்சு...
நீ பார்த்தியா ...?
இப்படி பரபரப்பாக
பல நேரங்களில்
எல்லாவற்றையும்
எங்காவது தொலைத்து விட்டு
அம்மாவோடு சண்டையிட்டு
அவசரமாய் கிளம்பும் நான்.....

இன்று தொலைந்துவிட்டிருந்தும்
அறையெங்கும் தேடாதிருக்கிறேன்....
அம்மா வந்து தானாகக் கேட்டபோதும்
வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.
ஒன்றுமில்லையென்று
அவசரமாக மறுக்கிறேன்.....
என்னையறியாமல் மனசுக்குள்
முணுமுணுத்துக்கொள்கிறேன்.
செய்வதறியாமல்
தனிமைக்குள் பதுங்கிக்கொள்கிறேன்....

இப்பொழுது சண்டையிடுவதற்கு நீதானடி வேண்டும்
என் இதயத்தை காணவில்லை.......!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-01


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube