பேசு
-------
சீர்வரிசை கேட்காத மச்சான் - என்
சிந்தையிலே தேனள்ளி வச்சான்!
மார்கழிக்கு இன்னும்நாள் உண்டு - வரும்
மார்ச்சில்நீ எந்தேகம் அண்டு!
நீர்காற்று வானமழை என்றாய் - இள
நெஞ்சைநீ காதலினால் கொன்றாய்!
கூர்கத்தி நான்வைத்து உள்ளேன் - நாளை
கொள்கைநீ மாறிவிடில் கொல்வேன்!
மாமியிடம் சொன்னாயா என்னை - அவ
மறுத்தாவா வீடுகாணி பொன்னை!
பூமியிலே நீவீரன் ஆனாய் - இதைப்
புரியாட்டால் தூசாய்த்தான் போவாய்!
---------------------------------------
06-02-2010 அன்று வார்ப்பில் வார்க்கப் பட்டிருந்த ஈழநிலா வின்(இலங்கை) ”தூசு கவிதைக்கான பதில் கவிதை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-02-25