மழையும் நானும்
----------------------
அடை மழை !
நனைந்து விடுவோமோ
என்ற பயத்தில்
நீயும் !
நீ
நடந்தால்
உன்னோடு சேர்ந்து
மழையில்
நனைந்தபடி
நடக்கலாம்
என்ற ஆசையில்
நானும் !!
ஆளுக்கு ஒரு ஓரமாய்
நிற்கிறோம்
மழையை பார்த்தபடி
நம்மை பிரித்த
சந்தோஷத்தில்
மண்ணில் விழுந்து
நக்கல் செய்கிறது
மழை ! !
- குரு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-02-06