Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நமக்கு உள்ளது .. மழைத்துளியா

- கோமதி நடராஜன்

நமக்கு உள்ளது ..

01.
நமக்கு உள்ளது
-------------------

தடுத்துப் பார்த்தாலும்
தலைகீழ் நின்றாலும்இநமக்கு
நடக்க இருப்பதுஇநடந்தேதீரும்.
தட்டிப் பார்த்தாலும்இ
தடவித் தேடினாலும்இ நமக்கு
வரவேண்டியது தானே வரும்
எட்டிப் பார்த்தாலும்
கொட்டித் தேடினாலும்இநமக்கு
உள்ளது மட்டுமேஇஉள்ளே கிடக்கும்.
ஓடி ஒழிந்தாலும்
ஒதுங்கி நின்றாலும்இ
நமக்குஎழுதியதுஇஎதிரே நிற்கும்.
அர்ச்சனை செய்தாலும்இ
ஆராதனை பண்ணினாலும்இ
நமக்கு இட்டதேஇசட்டியில் விழும்.
பொத்தி வைத்தாலும்
பூட்டிப் பதுக்கினாலும் நமக்கு
உண்டானதே ஒட்டி நிற்கும்
அடுத்தவர் தடுத்தாலும்
தட்டிப் பறித்தாலும் நமக்கு
நட்டது நமக்கென வளரும்.
ஏமாந்துஇவிட்டாலும்
ஏமாற்றி எடுத்தாலும் நமக்கு
எழுதியது மட்டுமே
என்றும் நிலைக்கும்.
விட்டுக் கொடுத்தாலும்
வீதியில் தொலைந்தாலும் நமக்கு
விதித்தது நம்மிடமே நிற்கும்.

ஆகவே---
எதை இழந்தாலும்
எது நடந்தாலும்
வளைந்து கொடுத்து
நிமிர்ந்து நிற்கும்
மூங்கிலாய்சமாளிப்போம்.
கழிவு நீர் கலந்தாலும்
கற்பூரதீபம் மிதந்தாலும்
கடல் தேடி ஓடும்
கங்கையாய் ஓடுவோம்.
ஒளியில் குளித்தாலும்
இருளில் மூழ்கினாலும்
இரண்டையும் ஏற்கும்
பூமியாய்சுழல்வோம்.


02.
மழைத்துளியா ?மறுபிறவியா ?
---------------------------------

கங்கையும், கழனியும்
கதிரவன் ஒளி பட்டு
கணத்தில் ஆவியாகி
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும்.
அடித்த காற்றில்,திசைமாறி,
இடித்த இடியில்,இடம் மாறி
கங்கையிலும் கழனியிலும், மறுபடியும்
விழுந்த மழைத் துளியில்
கங்கை எது ?கழனி எது ?
மாகானும் மாபாவியும்
காலனின் கயிறு தொட்டு
நொடியில் ஆவி அடங்கி
அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும்.
பாவக்கணக்கில் இடம் மாறி
புண்ணியக் கணக்கில்,இனம் மாறி
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும்
ஜனித்த சிசுக்களில்
மகான் யார் ?மாபாவி யார் ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அர்த்தமற்ற அஸ்தமனம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube