பிளிறல்
--------------
துக்கமோ
மகிழ்ச்சியோ
தும்பிக்கை உயர்த்தி
பிளிறும்.
துணைக்கான
அழைப்பாகவோ
ஆபத்திற்கான
சமிக்ஞையாகவோ
சுதந்திரத்தின்
பிரகடனமாகவோ
எத்தனையோ இருக்கலாம்
பிளிறலுக்கான காரணங்கள்.
பாகனை சுமந்து
நகர் வலம் வரும்
யானைக்கு மட்டும்
கிடைப்பதில்லை
ஒரு காரணமும்
பிளிறுவதற்கு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-01