பொக்கிஷம்
----------------
சுமந்தாள்
சுகமான இடம் தந்தாள்..
தன் உதிரத்தை உணவாக்கி
உயிர் தந்தாள்
சுகமான சூடும்
இதமான குளிரும் தந்து – தன்
இமை போல காத்தாள்
முகம் பார்க்க
சிரிக்க
முதல் மொழி பேச
முயன்று முயன்று நடக்க
முழுவதிலும் அவள்…
நான் அணியும் உடையில்
உண்ணும் உணவில்
சிரிக்கும் சிரிப்பில்
பேசும் மொழியில்
பார்க்கும் பார்வையில்
அவள் என் உயிராய்!
மற்றவர்க்கு எப்படியோ?
என் பார்வையில்
உலகிலேயே அவள்தான் அழகி….!
அன்பின் உருவமாய்
கோவிலின் உறைவிடமாய்!
தெய்வ மலர்முகமாய்!
என் உயிரின் உயிரானவள்…
அவள் என் அன்னை…!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15