குறு குறுக்கும் மௌனம்
------------------------------
நட்சத்திரங்கள்
இருளை போர்த்திக் கொண்டது.
நிலவும்
அவசரமாய்
அடி வானத்திர்க்கு அப்பால்
இடம் தேடியது.
நீண்ட ரயில் இருப்பு பாதையும்
நெடிய பெரு மூச்சாய் நீட்டிக் கிடந்தது.
காற்றும் தன் ஆரவார மொழி மறந்து
மூர்ச்சையானது.
மின்விளக்கும்
மஞ்சள் நிறமாய்
பதறியது.
நீ வந்தாய்
கொலுஸுக்கும் வலித்து விடாத படி
பூமி வழுக்கியது
ஆஹாயம்தான் தாங்க வேண்டும்.
ஒரு குகைக்குள்
அடைக்க பட்டதென் மௌனம்
ஏதோ இருப்பதாய்
சலனப் பட்டது...
நீ சென்றாய்
இன்னமும் சிற்றோடையின்
குறு குறுப்பாய்
எனது மௌனம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02