எங்க ஏரிய உள்ள வராதே .. என்னைப் போல ஒருவன்
01.
எங்க ஏரிய உள்ள வராதே
-------------------------------------
ஈக்களின் நந்தவனத்தில் ஒரு
வியாபாரமற்றக் கடை
எல்லாரும் வாடிக்கையாளர்களே
சில வேடிக்கையாளர்கள்
போட்ட கல்லில் கடைஅடைக்கப்பட்டதால்
இப்போ போக்குவரத்து தடைப்பட்டு
கழிவுநீர் வீட்டுக்குள் நுழை போடும்
இந்த சாக்கடை சீராகும் வரை
கொஞ்சம் அனுசரணையோடு
பயன்படுத்தினால் ஊருக்குள்
ரயில்நிலையம் வந்தாலும் வரலாம்
ஆனால் இந்த கற்சாலை உண்மையில்
ரயில் பாதைக்குயிடப்பட்டதில்லையாம்
நம் வாகனத்திற்கான தார்சாலை
என்கிறார்கள் ஓட்டுக்கு பணம்கொடுத்தவர்கள்
சாலைக்குயிரு புறமும் சிரித்தமுகத்துடன்
வளமையான மரங்கள் காட்சிக்கு.
கோடைகாலத்தில் கொஞ்சம் பெயிண்டும்
மழைகாலத்தில் கொஞ்சம் தண்ணியும்
காட்டுவர் எப்போதாவது கட்சிக்கொடியை
இறக்கிவிட்டு வெட்டப்பட்டபசும் மரங்களுக்கு
துணையாக இந்த மரத்தையும் மாற்றுவர்
இலவச நீச்சல் தொட்டிகள் உண்டு
அதில் குளிக்க அதிக நீருமுண்டு
நல்ல மழை நேரத்தில் செழிப்பான
குதுகலமே எங்களுக்கு மிச்சம்
இரவுகளில் மட்டும் பரணிகளில்
ஒட்டிக்கொள்வோம் காரணம் வீடுகளை
பள்ளத்தில் கட்டிக்கொண்டதால்
02.
என்னைப் போல ஒருவன்
---------------------------------
புதிய மடி கிடைத்தது
புகுந்தோடி தவழ்ந்தேன்
உயரமான தோள்கள் கிடைத்தது
உலகை ஏறிப் பார்த்தேன்
பாச விரல்கள் கிடைத்தது
பற்றிக்கொண்டேன் பயமின்றி
பைசா காசுகள் கிடைத்தது
பையுடன் செலவழித்தேன்
விழாகாலத்தில் சொக்காய் கிடைத்தது
விடியவிடிய போட்டுக் கொண்டேன்
பணவாசனையால் சீட்டுகிடைத்தது
படித்துப் பட்டம் வாங்கினேன்
வேலைக்கு தேவை வந்தது
வெளிநாட்டு குழுமத்தில் சேர்ந்தேன்
மணவறை யோகம் வந்தது
மணாலனாக மாலையிட்டேன்
பாசம் வசதிக்கு இடர்தந்தது
பணம்கட்டி முதியோரில்லத்தில்விட்டேன்
எனக்கென்று புதுவுறவுகிடைத்தது
உத்தமப்புத்திரனுக்கு தந்தையானேன்
அவனுக்கும் பாசம் இடருதோ?
தாத்தாப்பாட்டியின் காப்பக முகவரிக் கேட்கிறான்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02