எனக்கான ஒரு வரவு..
----------------------
மனது முழுக்க
ததும்பி வழியும்
கேள்வி முடிச்சுகள்..
உறங்கும் புத்தியில்..
ஓராயிரம் எண்ணங்கள்..
அனைத்திற்கும் தீர்வாய்..
தனிமையில் நான்...
வேண்டியது வேண்டி
வினைதேடும் காத்திருப்புகள்..
கனவிலும் விரட்டும்
கடிவாள நிருபணங்கள் ..
விடைகளே அறியா
வினாக்களின் விரட்டல்கள்.
எனக்குள்ளே இரைச்சலாய்..
புத்திமுழுக்க உரசல்கள்..
உடல்முழுக்க தழும்புகள்.....
தனிமையில் ... அதற்கான
மௌனத்துடன் காத்திருக்கிறேன்..
எனக்கான ஓர் வரவிற்காக...
02.
உன்னின் அறிமுகம்..உன்னின் அறிமுகம்
------------------------------------------
உன்னின் அறிமுகம்..
உதிரும் சருகுகள்
சத்தமின்றி
காற்றின் போக்கில்..
விருட்சத்தின் வரலாற்றை சுமந்த படி..
வார்த்தைகள் செதுக்கும்
மனதிற்கு தெரியும்
காற்றின் திசையில்
பயணித்தல் .. வாழ்க்கையென...
என்னின் வேர்களின்
முடிச்சுகளில்
இன்னும் மூச்சுவிடா..
விருட்சங்கள்
தூங்கிகொண்டிருகின்றன...
பிரபஞ்ச வெளியில்
முகவரி சொல்லா
பயணம் ..
விதைகளும் தூசிகளாகும்போது ....
ஆயின், தூசிகள் இடம் சேர்ந்தால்
தூண்களாகும்..
அதுவரை
எனது பயணத்தின்
படிமானங்களாய்
பயணம் செய்கிறேன்..
காற்றின் திசையில்..
காற்றின் வலு குறையின்
விழுந்த இடத்தில்தான்
உன்னின் அறிமுகம்..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-03