முட்கள் தின்னும் வேலிகள்
---------------------------------
விழிகளில் இன்னும்
வேலிகளின்
தட்டுப்பாடுகள்........
நகர்ந்து செல்லும்
நகர்வுகளில்
நக்கரித்து நகர
முடியாத
இயலாமையில்...
சொல்லும்
வார்த்தைகளில்
மௌனங்கள்
மட்டுமே
உச்சரிக்கப்படுகின்ற
தருவாயில்
மனதில் முட்கள்
வளர்ந்துக் கொண்டே.....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-03