இறைவனை தேடி அலைய வேண்டாம்.
மது மாது சூது வேண்டவே : வேண்டாம் !
மண்ணாசை பெண்ணாசை பேராசை வேண்டாம் !
பிறன் மனை நோக்கவே வேண்டாம் - அதில்
பேரின்பம் உண்டென்று அலைய வேண்டாம் !
கல்நெஞ்சர் கயவர் கொடுமதியர் - வஞ்சகர்
கள்வர் பொறாமைகாரர் உறவு வேண்டாம்
கடுகளவும் தீமைகளைப் புரிய வேண்டாம் - பிறர்
குடும்பத்தை ஒரு போதும் பிரிக்க வேண்டாம் !
வட்டிப்பணம் வாங்க வேண்டாம் - சிறிதும்
வரதட்சனை கேட்க வேண்டாம் - ஒரு போதும்
சட்டத்தை மீற வேண்டாம் - என்றும்
சங்கடத்தில் மாட்ட வேண்டாம்
வீண் பேச்சை பேச வேண்டாம் - பிறரோடு
புறம் பேசி மகிழ வேண்டாம் - வாழ்வில்
இதையெல்லாம் உணர்ந்து வாழ்ந்தால்
இறைவனை தேடி எங்கோ அலைய வேண்டாம்
மாதா பிதா குரு தெய்வம் மதித்து வாழ்ந்து
மனைவி மக்கள் நலன் பேணிக் காத்து
குடும்பமே கோவில் என்று வாழும்
மனிதனே தெய்வம் தேடி வணங்குவோம்.
-து.பாண்டியன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01