Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

செருப்புச் சேதி

- ரவி (சுவிஸ்)

செருப்புச் சேதி
--------------------

14 மார்கழி 2008.
பாக்டாட்டில் செருப்புக்கு சிறகு முளைத்த நாள்
இன்னும் 33 நாட்களுக்கான அமெரிக்க அதிபரை
சொல்லப்போனால் ஒரு போர் எசமானனை
சீண்டியது செருப்புப் பறவை.
பத்திரிகையாளர் மாநாட்டில் நடப்பட்டிருந்த
அமெரிக்க தேசியக்கொடியிடை சிறகடித்து
மோதி விழுந்தது அது.
ஒரு செய்தியின் வியாபகம் எழுந்தது,
அதிலிருந்து.
பேனாக்களின் வலிமை செருப்புக்கும் இருக்கிறது என
நினைவூட்டினான் ஒரு பத்திரிகையாளன்.

மாபெரும் மனித அழிவின் அலறல்களினதும்
சிதைக்கப்பட்ட ஒரு பூமியினதும்
இடிபாடுகளினுள் கூடுகட்டிய பறவை அது.

போருக்கான வியாக்கியானங்கள் தன்னும்
பொய்யாகிப் போனபின்னும்
ஈராக் எரிந்துகொண்டுதானிருக்கிறது.
எண்ணை வளம் அந்தப் பூமிக்கு
போரை பரிசாக வழங்கியிருக்கிறது

பதவி அழியமுன், எடுத்துச் செல்
எங்களது இந்த இறுதி முத்தத்தை என,
அவமானகரமான உனது முகத்தில் அறைந்துசொல்கிறோம்
எங்கள் தணியாக் கோபத்தினை என
செருப்புப் பறவை எடுத்துச் சென்ற சேதி
வரலாற்றில் அழிக்கப்பட முடியாததாய்
சொல்லப்பட்டாயிற்று, இரட்டைக் கோபுரத்தின் மீதான
விமானப் பறவையின் மோதல்போல்.

இந்த செருப்புப் பறவையின் முத்தம்
விடைபெற்றுப் போகும் அதிபருக்கு மட்டுமானதா அல்லது
பதவியேற்கப்போகும் அதிபருக்குமானதா என்பதை
தீர்மானிக்கும் நாட்கள்
எதிர்பார்ப்புகளுக்குரியன.

-ரவி
(17122008)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-19


ஐசக்

17 years 11 months ago

அன்புள்ள ரவி அவர்களுக்கு , உங்கள் "செருப்பு செய்தி" கவிதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு காட்டு மீரன்டிதன்மான செய்கையை நீங்கள் ஆதரிப்பது போல் உங்கள் கவிதை அமைந்துள்ளது. தயவு செய்து இப்படிபட்ட கவிதைகளை வார்ப்பினில் பிரசுரிக்காதிர்கள். பிரான்சிஸ் சைமன், பினங்கு, மலேசியா.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எனது மலையுச்சி மனிதன்
  • முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்
  • போர்பூத்த நாகரிகம்
  • றைன் நதி நீள்வில்
  • சிறகு கொள்
  • வாழ்தல் என்பது...
  • பழசின் புதுசு
  • யுத்தவாசம்
  • போரறிந்த சமாதானம்
  • புயலதிகாரம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube