Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அன்பே சிவம்.. பயம்

- கலாநிதி தனபாலன்

01.
அன்பே சிவம்
-------------------

யார் யார் சிவம்
மாமன் சிவம் மச்சான் சிவம்
அப்பன் சிவம் பெரிய அப்பன் சிவம்
எங்கும் நிறைந்த என் உறவுகள்
எல்லாம் சிவம்

நல்லதும் கெட்டதும்
நான் என்பதும் அறிய
அழுத்தங்கள் தந்தென்னை
ஆளாக்கி விட்டவரும் சிவம்
ஆயின் அன்பெங்கே?

அன்பே மனிதம்
அது ஆண்மைக்கும் பெண்மைக்கும்
அப்பாற்பட்டது
அதுதான் சிவமாயின்
அன்பே சிவம்
வாழ்வுக்குள் மனிதம்
வந்தமர்ந்து விட்டதனால்
வாழ்வே சிவம்.


02.
பயம்
---------

பயம் என்ற சொல்லின்
பயனென்ன?
பயத்தால் மனிதன் இழந்தவையும் உண்டு
அடைந்தவையும் உண்டு
பயம் பலருக்குப் பலவீனம்
இன்னும் பலருக்குப் பலம்

பயத்தின் பலத்தால்
பயன்பெற்ற பலரிலும்
பயத்தின் பலவீனத்தால்
பாழாய்ப் போனவர்
பல்லாயிரம் - ஆதலின்
அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும்
அஞ்சியவருக்கு சதா மரணம்
அஞ்சாதவருக்கு ஒருநாள் மரணம்
மரண பயத்தை வென்றுவிடுபவன்
மாவீரனாகிறான் அல்லது மகானாகிறான்

-கலாநிதி தனபாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வாசல்.. நகர்வு
  • தமிழ்.. புத்தனின் புதுமொழி
  • மனம்.. மாற்றம்
  • வீறு கொண்டெழுவோம்.. யார் இவர்கள்?
  • மானிடள்.. புலம்பெயர் வாழ்வு
  • கற்பனையில் வாழ்வு.. உறவு
  • என் தமிழ் உறவுகள்.. எதிரிகளுக்கு
  • வாழ்த்துக்கள்.. பொங்கு தமிழே
  • பிரியமானவளே.. காதல்
  • எழுத்து
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube