விமானம்
------------------
சிறு பிராயத்தில்
அலாதிப்பிரியம் விமானங்கள் மீது.
வெகு உயரத்தில் குச்சியாய் செல்லும்
விமானத்தை பலமுறை பார்த்தும் அதன்
ஆச்சரியம் குறைந்ததில்லை.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கூட
அதன் இறைச்சல் கேட்டு
வெளிமுற்றத்திற்க்கோடிவந்து
பார்த்திற்கின்றேன்.
கோவில்கொடையில்
சந்தையில் எங்கும் என்
விளையாட்டுப் பொருளில் முதன்மை
வகித்தது விமானம்.
சில தினங்களுக்கு முன் கூட
அதன் நினைவுகள்
பூட்டிய என் உதடுகளுக்குள்
சிறு புன்னகையை மிச்சம் வைத்திருந்தது.
ஆனால் இன்று என் பிள்ளைகள்
விமானச்சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று
பதுங்குக்குழிக்குள் புகும் அவலம் பார்த்து
அறைகின்றது! விமானம் ரசித்த என் நெஞ்சை.
விமானம் குறித்த என்
ரசனையும், ஆச்சரியமும்
கைநழுவி விழுந்த பீங்கான்
கோப்பையைப் போல
உடைந்து சிதறிவிட்டது.
பாட்டி சொல்லும் பேய் கதைகளைப் போல்
பயத்தை நிறப்புகின்றது விமானங்களும்
அதன் செயல்களும்.
-ஆ.முத்துராமலிங்கம்
சாலிகிராமம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-16