Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஈழத்தின் போர்க்கோலம்

- வசீகரன்

ஈழத்தின் போர்க்கோலம்
-----------------------------------

வண்டியில் பூட்டிய
மாடுகள் முதுகு நிமிர்த்தி
நம்பிக்கையோடுதான் நடக்கிறது
அகப்பட்டதை ஏற்றிய
கைகளும் கால்களும்
வலிகளோடுதான் மிதக்கிறது

குண்டு சுமந்து வரும் வானூர்தி
நெஞ்சைக் கிழிக்கிறது
நெடுநாள் எரியும் நெருப்பில்
பிஞ்சைப் புதைக்கிறது

பதினைந்தைக் கடக்காத பருவத்தின்
கனவுகள் பறித்து
வன்னிக் காட்டின் நடுவிலே
வான் குண்டு
குருதிக் கோலம் போடும்

ஆசை ஆசையாய்க்
கட்டிய வீடுகள் எல்லாம்
முகமிழந்து... முகவரியிழந்து...
அழிந்து போய்க் கிடக்க
ஆச்சியின் புலம்பல் கேட்கும்

பாடசாலைக்குப் போன பிள்ளை
பாதி வழியிலே...
தாய்மண்ணை அணைத்தபடி
இரத்தச் சகதிக்குள்
விழிகள் திறந்தபடி
இழவு வீட்டின்
குரல்கள்கூட இல்லாமல்
நடுத் தெருவில்
இறந்து கிடக்கின்றான்

பரந்தன் பாடசாலையில்
பரீட்சை எழுதமுடியவில்லை
கதறி அழுது கொண்டு
சிதறி ஓடுது குஞ்சுகள்
பட்டினியால் மரணங்கள்
பார்த்துப் பழகிவிட்டது
மனவதையால் மரணங்கள்
புதிதாக பிறக்கிறது

எங்களோடு வாழ்ந்த
குற்றத்திற்காகவே
ஆறறிவு படைத்த
மனித மிருகங்களால்
ஐந்தறிவு படைத்த
மிருக மனிதர்கள்கூட
சிதைந்து கிடக்கிறார்கள்!
இறைச்சிக் கடைகளில்
ஆடு மாடு அறுப்பவன்கூட
இன்று திரும்பி நின்று
அழுகிறான்
அவனுக்கும் வலிக்கிறது

பச்சைப் புல்வெளிகள்
எறிகணை வீச்சில் கருகிட
மாமரத்தின் குயில்களும்
எங்கோ பறந்து போனது
குரைக்கும் நாய்கள் கூட
இப்போது எமக்காக
கண்ணீர் விட்டழுகிறது

ஏக்கத்தோடு பெருமூச்சும்
விடுதலை நெருப்பின்
விழிகள் பார்த்தபடி
காத்துக் கிடக்க
உயிர்ப்பலிகள் தொடர்கிறது

உங்களுக்கு இரவிலாவது
விடிந்தது!
எங்களுக்கு பகலிலாவது
விடியுதா பார்ப்போம்!

-வசீகரன்
நோர்வே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-18


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எங்கள் எல்லைக்குள் வரும்
  • தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா
  • தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்
  • கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும்
  • முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube