கன்னித்தீவு
-------------------
பெருக்கலாய் வாழ்வோம் என்று
கழித்தலாய் போன வாழ்க்கை...
கூட்டலாக்க முயற்சி... பட்டு!
முடியாததால்...வகுத்தலாகி
வெற்றுக் கணமாய் ! சற்றே கணமாய்...
என்றோ படித்த கணக்கு ஞாபகமாக
கணக்கில் கூட கடன் வாங்கி தான்
கழிக்க முடியும்...இப்படியிருக்க
நாம் மட்டும் விதி விலக்க...
கொடுத்த கடனும்...வாங்கிய கடனும்
கன்னித்தீவு போல...
-அய்யா புவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-25