சிதைவுகள்
------------------
பானை உடைந்து
சுடுபருக்கைகளாய் சிதறுகின்றன.
யோசனைக்கு உவப்பாயும்
காயங்களுக்கு களிம்புமாயுமில்லை.
வியர்த்தமாய் காத்திருந்த விளைநிலங்களை
விழுங்குகின்றன தரிசுகள்.
முகம் மறைத்து வெக்கை கொட்டுகின்றன
தோட்டத்து சூரியகாந்திகளும்.
உண்டதும் உமிழ்ந்ததும்
அவிழ்ந்ததும், அவிழாததுமானவைகளுக்கு
அடையாள்ம் தேவையற்றதாகிறது
குப்பைக்குவியலில்.
-சூர்யா
www.manoharggs.blogspot.com
- சூர்யா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-23