இருவரிக் கவிதை.. தாயெனும் தேவதை.. அன்பெனும் ஒளி
01.
இருவரிக் கவிதை
----------------------
இருளறையில் கருவாகி
உருளையில் பிணமாகி
இருவரிக் கவிதையானாய்
மணற் கூட்டிலுயிர்
பொதிந்த மனிதா!
02.
தாயெனும் தேவதை
----------------------
சிறகுகள் சுழலும்
செயற்கைக் காற்று
பஞ்சு பொதித்த
தலையனை, மெத்தை
எதுவுமிங்கு எனக்காக
தரையமர வேண்டாமே
தாயெனும் தேவதையின்
மடியெனக்காக காத்திருக்க...
03.
அன்பெனும் ஒளி
----------------------
கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்
முருக்கித் திரித்த வெண்நாவுடைய
மண்ணெரித்து எண்ணெய் உண்ட
வெண்நா எரிக்கும் விளக்கே...
நீயறிந்த திசை எல்லாம்
வெளிச்சமெனும் புகழ் நீட்டி
ஒளி வரவைக் காட்டுகிறாய்
எந்தாயும் உனை காட்டில்,
வெளிச்சம் அதிகம் தருவாள்!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு
உன்னிடம் ஈடு உண்டோ?
-வினோத்குமார் கோபால
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-02