மனத்திரையில் காட்சிகள் ! மாத்திரைக்கு வேலையில்லையா ?
-------------------------------------------------------------------
வேலையின் சுமை
எப்போதும் போல் !
எப்போதையும் விட
அதிகமாய் !
எந்நிலை புரியா ! அறியா !
என் உறவுகள்
என்னோடு பகை
உடல் வெல வெலத்தது
மறுபடியும்
மருத்துவர்
ரத்த பரிசோதனை
அனைத்தும் நன்றாகத்தானே
இருந்ததாய்ச் சொன்னார்
பின் ஏன் இன்னும்
இப்படி ஆராய்கிறார் ?
உலகில் உறைய
கடமைகள் உள்ளதே !
குடும்பத்தில் குழப்பத்தால்
அதிர்ச்சி....
வினவுகிறேன்
தூக்கமாத்திரகள்
பரிசளிக்கப்படுகின்றன !
மனத்திரையில் காட்சிகள்
ஓடாமல் இருந்தாலன்றோ !
மாத்திரையால் எனக்கு
மாநித்திரை கிடைக்கும் !
-மதிசிவன்
- மதிசிவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-15
மாத்து இரை என்பதாலோ 'மாத்திரை'!
மனத் திரை நிகழ்வு' விளங்கியதே -அத்தனையும்
நமது மகிழ்ச்சியை என்றும் விரட்டும்
யமனாய் முன்னே நின்றதே.
வை.அண்ணாஸாமி
கர்னாடக இசை கலைஞர்.
சென்னை.