நம் வாழ்வு?
----------------
கட்டிடங்களில் கூடுகட்டப்
பழகிவிட்டன பறவைகள்.
கூண்டுகளில் வாழ
கற்றுக்கொண்டுவிட்டன
விலங்குகள்.
பறவைச் சிறகணிந்து
விலங்கு மனம் தரித்து
மனிதத் தோல் போர்த்திய
வாழ்வு நமது!
-ரத்திகா
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
- ரத்திகா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-26