மேகம், இடி, மின்னல், மழை வண்ணம்.. வன்முறை
01.
மேகம், இடி, மின்னல், மழை வண்ணம்
------------------------------------------
கூடல் கொஞ்சல்
கொஞ்ச நேரமே!
கூடலில் நடந்த
குழப்பம் எண்ணவோ!
கலவர பூமியாய்
கர்ஜனைகள்
சீறிப் பாய்ந்த
கோர விழிக் கணைகள்!
பொருக்க முடியாது
பொங்கிய கண்ணீர்
மள(ழ) மள(ழ) வென்று
கொட்டியது
எப்படியோ!
சமாதானத்திற்குப் பின்
ஏழுவண்ணக் கொடியசைத்தாள்(ல்)
எழில்
02.
வன்முறை
-----------------
மகாத்மாவே!
உம்
அகிம்சை வழி நடக்கவே
அனைவரும் விரும்புகிறார்கள்
அவ்வப்போது
உம்மைக் காணும் போதெல்லாம்
பலர் கண்களுக்குத்
தெளிவாகத் தெரிவது
நின்…
கையிலிருக்கும்
"கைத்தடி" மட்டுமே!
-மீன்கொடி கோவிந்தராசு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-19