எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்று
முட்டி மோதி முயன்றாயிற்று இதுவரை
எதுவும் முடியவில்லை
எதா£¢த்தமாய்
தீமூட்ட வருவார்களென்று
பந்தங்ளைத் தயார்ப்படுத்தினோம்
இதுவரை
மூட்ட யாருமில்லை
தீயாய்
இதுமட்டுந்தான் இதுமட்டுந்தானென்று
பொய்மேல் பொய்யாய்ச் சொல்லும்படியாயிற்று
இதுவரை
எதுவுமில்லை வாழ்வில்
மெய்யாய்
பெரிய்ய சந்தோசத்தை எதிர்பார்த்து
சின்னச்சின்ன சந்தோசங்களையெல்லாம்
உதறும்படியாயிற்று இதுவரை
எந்தச் சந்தோசமுமில்லை
பெரிதாய்
நன்றி ::
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”
வெளியீடு : பயணம் புதிது
புலியூர் 639 114
கரூர் வட்டம்
தொலைபேசி :: 04324 - 50292
- சகாரா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01