குதிரை ஓட்டி.. உயிர் < பொருள்.. நிரந்தர வலி
1.குதிரை ஓட்டி
என் முதல் குதிரை
பாதைகளிலிருந்து தாவி..
பயணிகள் மீது மோதியது!
என் இரண்டாம் குதிரையின்
நேரான பாதை ..
வளைவுகளாகிறது!
என்று தணியுமோ
பின் இருக்கை முத்தங்கள்?
2.உயிர் < பொருள்
வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்�
பொசுங்கிப் போனது!
எல்லாருமே ...
கசாப்பு கடைக்காரர்கள்தான்!
3.நிரந்தர வலி
காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது
-ரசிகவ் ஞானியார்
------------------------------------------------------
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-16