Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

எங்கே என்... கலர்ப் பாம்பு...

- டீன்கபூர்

எங்கே என்... கலர்ப் பாம்பு...
----------------------------------------

1.எங்கே என் அம்புலி?

கடல் மடியில் தவழ்ந்து
கடல் மடியில் உணர்ந்து
கடல் மடியில் கூடி
கடல் மடியில் காதல் பொழிந்து??

எங்கே என் அம்புலி?

கடல் காற்றில் மூச்செறிந்தாய்
கடல் வெளியில் உரத்துச் சிரித்தாய்
கடல் மடியில் எழுதி வடித்தாய்?.

எங்கே என் அம்புலி?

அச்சம் முகத்தைக் காய்த்து
இதயத்தில் செட்டை முளைத்து
பொழுது பொழுதாய் அடித்து
தெருவும் திசையும் வேறுவேறாய்?.

எங்கே என் அம்புலி?

எங்கே ஒளிந்தாய்
எங்கே மனசை விதைத்தாய்
எங்கே தூக்கத்தை அணைத்தாய்
எங்கே கனவைக் கரைத்தாய்.

இனி என்ன
நான் எங்கு செல்வேன்?
காற்றின் முதுகில் பயணம் செய்து.

வா.
அன்பே!
இனியேனும் வனம் ஒன்றில் வகை செய்வோம்
ஒரு பெருமரத்தில் தவழ்ந்து பூரிப்போம்
என் நாள் வரும்
உன் மூக்கை நுள்ள
கடலை அணிசெய்ய

என்றும் உன் உருவம் மறவேன்
உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில்.



2.கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி

குடி நுகரும் ஊருக்குள்
வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள்
ஜனநாயகம்
காயாத கருவாட்டில் புழுக்கும்
தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும்.

பச்சைப் பாம்பு ஒன்று
மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும்
வறண்ட நாக்கு மக்களுக்கு பேசும்
எதிர்கால நாற்காலி முதிரையில் இருக்க
சுனாமிக்கு மூக்குத்தி குத்தி விழா காணுகிறது.

நீலமாய் ஒரு பாம்பு
சுனாமியால் நிரம்பிய வெளிநாட்டுச் சுரியை
நிரப்பிக் காண்பித்து
தெற்கில் அது சட்டை கழற்றுகிறது
காட்டையும் களனியாய்க் காட்டுகிறது
வடக்கையும் கிழக்கையும் என்னில் போர்த்துவேன் என்று
கூதலைக் காட்டுகிறது.

சிவப்பாய் இன்னொன்று
கண்களை உருட்டும்
முடியைக் கோதும்
பிணம் இனித் தின்னேன் என உண்மையாக்கும்
உழைப்பாளியைத் தீண்டேன் என ழுழங்கும்
ஏழைகளின் கண்ணீர் உவர்த்தலாகாது எண்ணுகிறது.

இப்பாம்பு
அலகொன்றை எடுத்து சிலம்பாடும்
தனியிடம் ஒன்றுக்கு
இனிப்பூட்டி அழைத்து அழைத்து
மூன்றாம் கடலிலிருந்து சீறுகிறது
தேசத்தை வெளிச்சப்படுத்திய
தாரகையின் மொழியில்

சுனாமியின் முடிபிடுங்க வந்திறங்கும்
சுனாமியின் நகம் பிடுங்க வந்திறங்கும்
ஊருக்குள்
மீண்டும் நாதியற்றவர்களைக் கொத்த
எல்லா வண்ணப் பாம்புகளும்
சுனாமி பூசிய கரியுடன் கியூவில்?

ஜனாநாயகம் மணத்த தேங்காய்ப்பூ.

-டீன்கபூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-09


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எனது பாத்திரம் இதுவாகி
  • நான் திறந்துவிடப்பட்ட சாளரம்
  • கனவின் துண்டு
  • எனக்காகவே ஓர் எறும்பு
  • குளிர்ச்சியின் காதல்... மரங்கொத்தி...
  • ஒட்டிக்கிழங்குக்காரி
  • அந்தி வேளை... கள்ளன்...
  • தேர்தலில் குதியாத வேட்பாளனாக
  • நினைவும் இன்னொன்றும்
  • நிலத்துண்டு..ஒவ்வொரு.. காற்று..புதிய பூ
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube