Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

எல்லா மனிதர் பற்றிய குறிப்பு.. வளையம்

- கருணாகரன்

எல்லா மனிதர் பற்றிய குறிப்பு.. வளையம்
---------------------------------------------------------------
1.எல்லா மனிதர் பற்றிய குறிப்பு

பார்த்த மனிதர்களைப்பற்றி
எந்த மனிதரிடமுமில்லை
எல்லா மனிதர் பற்றிய குறிப்பும்

எல்லா மனிதரிடமும் இல்லை
எல்லா மனிதர் பற்றிய
எல்லாமும்.

அவரவர் வயிறும்
அவரவர் உலகமும்
தனித்தனி யென்றான்
என்றோ கண்ட யாரோ ஒருத்தன்
தனித்தனியாகவே யிருக்கிறது
எல்லோர்க்கும் வயிறு
அவரவர்க்கான உலகமாய்
இன்னும் எதுவுமோவாய்


2.வளையம்

அப்படியே இருக்கட்டும்
இந்த வெளியும் குறுகலும்

யாரும் வரவில்லை
இந்த அகாலத்திலும்

பனைகளின் இடையே
நெளியும் ஒழுங்கையில்
இன்னும் மணந்து கொண்டேயிருக்கிறது
தினவடங்காக் கலவரமும்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
சாவும்

வெளியேறிச் சென்றவர்கள்
திரும்ப முடியாத இடத்தில்
தரித்திருக்கக் கண்டேன்
விட்டுச் சென்ற வார்த்தைகள்
திரும்பி வர விடவில்லை ஒருபோதும்
யாரையும்

அந்த வார்த்தைகளிலிருந்து
கடக்க முடியாத பெரும் சுவர்களில்
படர்ந்திருந்தன
முட்செடிகள்

- கருணாகரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பூக்குங்காலம்
  • பலியாட்டின் கண்கள்
  • பூனையின் நிழல்
  • சிரிக்கும் பறவை
  • இனி
  • அணில் மரம் பூனை
  • காத்திருப்பின் நிழல்
  • ஒரு வாழ்த்துப்பாடல்
  • மேலுமொரு விருந்தாளி
  • ஒரு மைதானக்காட்சி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube