Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மறைந்து கிடக்கும் இசை பற்றிய காதல்

- பர்ஸான்.ஏ.ஆர்

மறைந்து கிடக்கும் இசை பற்றிய காதல்

மிக மெளனமாய் உன்னை ஆராய்திருக்கிறேன்
ஒரு கோடி மழைத்துளிகள் இணைத்து
உன் உருவத்தினை நான் செய்த போதும்
அதனையும் தாண்டி நீ வேறு உருவமானாய்.

என்னைக் கட்டிப்போட்டுவிட்ட உன் வார்த்தைகளும்
அதனை மிஞ்சிய பார்வைகளும்
உன் மெளனமான பொழுதுகளில்
என் உயிரினைக் குடித்துவிடுகிறது.
காமம் ஒருசொட்டும் கலக்காத இந்த காதல்
இன்றென்னை துரத்தித் துரத்திக் கொல்கிறது.

என்னைவிட
நானுன்னை நேசித்த அனைத்துப் பொழுதுகளும்
வெறிச்சோடி தூர்ந்து போய்க்கிடக்கிறது.

நீ இன்றென்னைப் பார்ககவுமில்லை,
மன்னிக்கவும்
உன்னைப்பார்க்க என்னால் இயலவில்லை.

ஏதேதோ கேட்டாய் இன்றென் முன்
பிதற்றல்கள் நிறைந்த என் பதில்களும்
உன் கண் பார்க்காத என் பார்வையும்
உனக்கு அச்சத்தினை தந்திருக்கும்.
உன்னிடம் பொய் சொன்ன முதல் நாளின்று.

இன்று நீ இழந்து நிற்பவைகளை விட
நான் இழந்து நிற்பவைகளேயதிகம்.
உன்னைக்காண வரவே கூடாதென்கிறேன்.

என் இரவுகளில் துணையிருக்கும்
கடலின் மீது வழியமைத்து
இறைச்சலடங்கிய அதன் நடுவில் நான்
தனித்து விடப்பட வேண்டும்.

நிறுத்தப்பட்ட கடிகாரமாய் இருந்துவிட
என் மனம் ஆசைப்படுகிறது.
நினைப்புக்கள் எதுவும் தேவையில்லை,
நீயழைக்காத பொழுதின் துன்பம் இனியும் வேண்டாம்.

இயங்க முடியவில்லை
நிறுத்தப்பட முடியவில்லை.

03.11.2007

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வானங்கள், பூமிகள் மீது சத்தியமாக...
  • எல்லாமே முடிஞ்சு போய்ச்சு..
  • இடைமறிக்கும் உயர்ந்த கோஷங்கள்
  • உனதும் எனதும் உறவும் பிரிவும்
  • இன்னுமொருவனும் கற்பழித்தான்..
  • காறித் துப்பி எழும்புவோம்
  • இரண்டு தடவைகள் வாழ்கிறாய்
  • நாட்கள் மெலிந்தன
  • அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube