மீன்களே எச்சரிக்கை
மீன்பிடிக்கிறவர்கள்
வருகிறார்கள்
வலையில்லாமல்
வார்த்தைகளோடு
எந்தமீன் என்ற
எந்த இலக்கும் இல்லை
பிடிபட்ட மீன்களெல்லாம்
பிரமாதமான மீன்கள்
பிடிபட்ட மீன்களே
பிடித்தமான மீன்கள்
பிரமாதம்...பிரமாதம்
புகழோசைக்குள்ளே
சமையல் ஆசையும்தான்
சேர்ந்திருக்கிறது
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18