நினைவுச்சிறை ... கா(த)னல்
நினைவுச்சிறை
உன் நினைவுச்சிறையில்
தினமும் கைதியாகின்ற
நான்
விரும்பவில்லை
விடுதலையை மட்டும்
ஏன் தெரியுமா?
சிறையில் மட்டுமே
நீ என்னை
சந்திப்பதால்
கா(த)னல்
என் கனவு
என் காதல்
என் காத்திருப்பு
எல்லாமே
இன்று கானல்
நீராகிவிட்டது
ஆனாலும்
செத்துவிட
நான் பாலைவனத்தில்
நடக்கவில்லை
நான் இருப்பது
நந்தவனச்சோலையில்
திரும்புமிடமெல்லாம்
நீர்தான்
ஆனால் அவை
அத்தனையிலும்
உன் விம்பத்தின்
பிரதிபலிப்பு
இருந்தும் இல்லாதது
போல
-- T.சுபந்தினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-21