தமிழகத்தின் தென்பாண்டிச் சீமையிலிருந்து வந்திருப்தால் அந்தப்பகுதிக்கோ உரிய தொன்மமும் நாட்டுப்புற இயலும் சிங்கப்பூர் மலேசிய வாழ்வு தந்த நாகரிகக்கூறுகளும் இணைந்ததாக பாலு மணிமாறனது கவிதைகள் பரிணமிக்கின்றன.
ஒரு எழுத்தாளன் எந்த சாதி மத இன நிறமுடையவனாக இருந்தாலும் மனித நேயமிக்கவனாகவும் மானுட விடுதலையை உரத்த குரலில் பேசுபவனாகவும் இருப்பதை தவிர்க்க இயலாது.
மனித நேயத்தையும் அதன் விடுதலையும் உரத்துப்பேசும் பாலு மணிமாறன் மனித உறவுகளின் மெல்லிய உணர்வுகளையும் தனது கவிதைகளில் தொட்டுக்கொண்டே செல்லத் தவறவில்லை.
சை.பீர்முகம்மது
மலேசயியா
- Log in to post comments